விழுப்புரத்தில் மினி பஸ் சேவை தொடக்கம்

தொடக்க நிகழ்ச்சி கலந்து கொண்ட எம்எல்ஏக்கள் மற்றும் ஆட்சியர்;

Update: 2025-06-18 16:32 GMT
தமிழக அரசு கிராமப்புற பகுதிகளுக்கு புதிய வழித்தடங்களுக்கான பஸ் சேவையை விரிவுபடுத்தி வருகிறது.முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி புதிய விரிவான மினி பஸ் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.தஞ்சாவூரில் போக்குவரத்து துறை சார்பில் நடந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், புதிய விரிவான மினி பஸ் இயக்கும் திட்டத்தினை நேற்று துவக்கி வைத்தார்.இதனை தொடர்ந்து, விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானத்தில், விழுப்புரம் மாவட்டத்திற்கான முதல் கட்ட மினி பஸ் சேவை துவங்கும் விழா நடந்தது.கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மஸ்தான், லட்சுமணன் பங்கேற்று, புதிய விரிவான மினி பஸ் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.விழாவில் எஸ்.பி., சரவணன், சப் கலெக்டர் வெங்கடேஷ்வரன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அருணாச்சலம், முக்கண்ணன், போக்குவரத்து ஆய்வாளர்கள் கோவிந்தராஜி, முருகவேல், முருகேசன் உட்பட அலுவலர்கள், மினி பஸ் உரிமையாளர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Similar News