திருவெண்ணைநல்லூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை;
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வீரப்பன், 60; நல்லதம்பி, 55; இருவரும் நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில் மொபட்டில் பேரங்கியூரிலிருந்து வளையாம்பட்டு செல்வதற்காக பேரங்கியூர் கூட்ரோடு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்தனர். மொபட்டை நல்லதம்பி ஓட்டினார். அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்த கார் மொபட் மீது மோதியது. இதில், வீரப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார். நல்லதம்பி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திருவெண்ணெய்நல்லுார் விசாரித்து வருகின்றனர்.