விழுப்புரத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில தலைவர்
மாநிலச் செயலாளர் வினோஜ் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்;
விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திற்கு, தெற்கு மாவட்ட தலைவர் தர்ம ராஜ் தலைமை தாங்கினார்.மாநில செயலாளர் வினோஜ் செல்வம், துணை தலைவர் சம்பத், வடக்கு தலைவர் விநாயகம், கடலுார் மாவட்ட தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாவட்ட பொது செயலாளர் எத்திராஜூ, பொருளாளர் பிரிமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அலங்கரிக்கப்பட்ட வேலை வழிபாடு செய்த பின்பு பேசியதாவது;விரதம் இருந்து நிர்வாகிகள் அனைவரும் மதுரை மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும்.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவது உறுதி. ஆன்மிகம் மற்றும் இந்து மக்களுக்கு எதிரானது தி.மு.க., ஆட்சி.இந்த ஆட்சி இருக்க கூடாது என பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முடிவு செய்துள்ளனர்.அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும். பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் யாத்திரையாக சட்டசபைக்கு செல்வர். அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி உறுதியாக உள்ளது என கூறினார்.இதில், மாநில செயலாளர் மீனாட்சி நித்யசுந்தர், விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் முரளி சுந்தர்ராஜன், ராதாகிருஷ்ணன், குபேரன், ஸ்ரீதேவி சுகுமார், தியாகராஜன், ஜெயக்குமார், ஊடகப்பிரிவு மாநில செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட தலைவர் சரவணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.