சென்னைக்கு சென்ற செஞ்சி மாணவன் மாயம்

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை;

Update: 2025-06-18 16:38 GMT
செஞ்சி சந்தைமேடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகணபதி மகன் தினேஷ், 18; பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ளார். இவர், மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் தேர்வு எழுதி இருந்தார். மேலும், வெளி நாடு சென்று படிப்பதற்காக பாஸ்போர்ட் எடுக்க 13ம் தேதி சென்னை சென்றார். அதன்பிறகு தினேஷை குடும்பத்தினர் தொடர்பு கொள்ள முடியவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது தாய் ஜெயமாலா அளித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News