வெள்ளகோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
வெள்ளகோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் காவல்துறையினர் கைது உள்ளனர்;
வெள்ளகோவில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி முத்து வள்ளியரச்சல் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்ற முத்தூர் பெருமாள் புதூரை சேர்ந்த செந்தில் (வயது 56) என்பவரை கைது செய்தார்.