கல்லூரி மாணவி மாயம். தந்தை புகார்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கல்லூரிக்கு சென்ற மகள் மாயம் என தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.;

Update: 2025-06-19 07:43 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் மாரியம்மன் நகர் மறவன்குளம் பின்புறம் பகுதியில் வசிக்கும் சரவணனின் மகள் ராஜலட்சுமி( 19) என்பவர் விருதுநகரில் உள்ள வி வி வி கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தினமும் காலை 8.30 மணி அளவில் கல்லூரி பேருந்தில் சென்று மீண்டும் மாலை 5.30 மணி அளவில் மீண்டும் திருமங்கலம் வருவார் .வழக்கம் போல் நேற்று முன்தினம்( ஜூன் .17) காலையில் வீட்டை விட்டு கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் அன்று மாலை வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்கவில்லை என்பதால் அவரது தந்தை சரவணன் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.

Similar News