பல்லடம் அருகே மங்கலம் சாலை மறியல்

பல்லடம் அருகே மங்கலத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்;

Update: 2025-06-19 12:46 GMT
திருப்பூர் மாவட்டம் மங்கலம் சாலை அறிவொளி நகர் பிரிவு பகுதியில் தற்போது இப்பகுதியை சேர்ந்த பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பொள்ளாச்சியில் இருந்து புளியம்பட்டி செல்லும் மாநில நெடுஞ்சாலை தற்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, பரம்பிக்குளம் ஆளியாறு திட்டத்தின் பொதுப்பணித்துறையின் கிளை வாய்க்காலின் மேற்பரப்பு உடைந்து தற்போது ஆபத்தான மண் சாலையாக உள்ளது இதனால் இவ்வலையை செல்வோர் பள்ளத்துக்குள் விழும் அபாயம் உள்ளதால் உடனடியாக பொதுப்பணித்துறை இதனை பராமரித்து புனரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து தற்போது இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், இதனால் பரபரப்பு ஏற்பட்டு பல்லடம் போலீசார் தற்போது சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்

Similar News