காவல் நிலையத்திற்கு ஓடி வந்த காதல் ஜோடிகள்
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த காரணத்தினால் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு;
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ராஜ்கிஷோர் (23) எம்.எஸ்.சி அக்ரி படித்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் அதிமுகவில், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். இவரது மகள் கிருபா (23), தர்மபுரி சட்டக் கல்லூரியில் வக்கீலுக்கு படித்து வந்துள்ளார் ராஜ்கிஷோருக்கும், கிருபா இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இது இருவீட்டாருக்கும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இரு குடும்பங்களும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், வீட்டை விட்டு காதல் ஜோடி வெளியேறியது.இது குறித்து இரு குடும்பத்தினரும், தங்களது பிள்ளைகளை கண்டுபிடித்து தருமாறு தனித்தனியாக மங்கலமேடு போலீசில் புகார் கொடுத்து இருந்தனர். கிருபா - ராஜ்குகிஷோர் காதல் ஜோடி கடந்த 16ம் தேதி கடலூர் மாவட்டம், திருவந்திபுரம் சிவன் கோயிலில் தாலிக்கட்டி கொண்ட அவர்கள், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காணை போலீஸ்ஸ்டேசனில் கணவன் மனைவியாக தஞ்சம் அடைந்தனர். அங்கு இருவீட்டாரும், திருமணத்தை அங்கீகரிக்காததால் அவர்களிடம் உரிய பாதுகாப்பு வழங்க கோரி மனு கொடுத்தனர்.போலீசார், இரு தரப்பு வீட்டாரையும் அழைத்து காதல் ஜோடி இருவரும் மேஜர் என்பதால் அவர்களை விரும்பம் வாழ விட வேண்டும் என்றும், அவர்களுக்கு எந்தவித தொந்தரவு அளிக்க கூடாது எனவும் தெரிவித்தனர். அதன் பேரில், பெற்றோர்கள் அவர்களை அங்கேயே விட்டு வந்த நிலையில், காதல் ஜோடி நண்பர்கள் வீடுகளுக்கு சென்று புதிய வாழ்க்கையை தொடங்கி உள்ளனர்.