பெரம்பலூரில் சிறப்பு யோகா பயிற்சி
சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா ஆசிரியர்களுக்கான, சிறப்பு யோகா பயிற்சிகள் மற்றும் முன்னேற்பாடு கூட்டம் மன்றத்தின் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.;
பெரம்பலூரில் சிறப்பு யோகா பயிற்சி பெரம்பலூர் அறிவு திருக்கோயிலில் மனவளக்கலை மன்றம் சார்பில் சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா ஆசிரியர்களுக்கான, சிறப்பு யோகா பயிற்சிகள் மற்றும் முன்னேற்பாடு கூட்டம் மன்றத்தின் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. பயிற்சி குறித்து யோகா பேராசிரியர்கள் சுந்தர் மற்றும் தியாகராஜன் விரிவாக எடுத்துரைத்து பேசினர். நிறைவாக மன்ற செயலாளர் சாந்தகுமார் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.