மின்சாரம் பாய்ந்ததில் எலக்ட்ரீசியன் பலி

மதுரை மேலூர் அருகே மின்சாரம் பாய்ந்ததில் எலக்ட்ரீசியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;

Update: 2025-06-20 05:24 GMT
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மாங்குளம் கண்ட முத்துப்பட்டி லட்சுமிபுரத்தை சேர்ந்த சிதம்பரத்தின் மகன் அழகேந்திரன்(47) என்பவர் எலக்ட்ரீசியனாக உள்ளார். இவர் கடந்த 8ம் தேதி அய்யம்பட்டியில் பணி செய்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்ந்தனர். இந்நிலையில் நேற்று (ஜூன் .19) மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி ராணி மேலவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News