ராகுல்காந்தி பிறந்த தினக் கொண்டாட்டம்

ராகுல்காந்தி பிறந்த தினக் தொடரப்பட்டது.;

Update: 2025-06-20 15:16 GMT
அரியலூர்,ஜூன்,20- : காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்கட்சித் தலைவருமானராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி, அரியலூரில் அக்கட்சியினர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினர். அரியலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர், அங்குள்ள காமராஜர் மற்றும் காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், நகரத் தலைவர் மு.சிவகுமார், வட்டாரத் தலைவர்கள் கர்ணன், பாலகிருஷ்ணன், கங்காதுரை, திருநாவுக்கரசு, மாவட்ட பொருளாளர் மனோகரன் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியைத் தொடர்ந்து பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அரியலூர் நகர காங்கிரஸ் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. :

Similar News