அரியலூர் ரெப்கோ வங்கியில் வாடிக்கையாளர் சந்திப்புக் கூட்டம்
அரியலூர் ரெப்கோ வங்கியில் வாடிக்கையாளர் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.;
அரியலூர், ஜூன் 20 - அரியலூரிலுள்ள ரெப்கோ வங்கியில் வாடிக்கையாளர் சந்திப்புக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு, வங்கியின் மண்டல மேலாளர் வி.சந்தானவேலு தலைமை வகித்து பேசியது: ரெப்கோ வங்கியில், ஃபார்ச்சூன் பிளஸ் என்ற சிறப்பு வைப்பு தொகைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் மூத்த குடிமக்களுக்கு 8.75 வட்டியும் மற்றவர்களுக்கு 8.25 வட்டியும் வழங்கப்படுகிறது. மேலும் வீடு மற்றும் வணிக வளாகங்களின் பெயரில் அடமான கடனும், தங்க நகைக் கடன் கிராம் ஒன்றுக்கு ரூ.6,800 வரையும் கடன் வழங்கப்படுகிறது. வியாபாரிகள் தங்கள் இருப்பிடத்திலிருந்து தினசரி சேமிப்பு மற்றும் கடன் திரும்பி செலுத்தும் தினசரி வைப்பு திட்டமும் உள்ளது. வங்கியில் பாதுகாப்பு பெட்டக வசதி மிகக் குறைந்த வாடகையில் வழங்கப்படுகிறது என்றார். வழக்குரைஞர்கள் ராபர்ட்கென்னடி, செந்தில்குமார்,எஸ்.ஆர்.கணேசன், முத்துரெங்கன், வங்கி முதன்மை மேலாளர் ப.துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். இந்த கூட்டத்தில் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் துணை மேலாளர் காயத்திரி நன்றி கூறினார்.