கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி அமைச்சர் பங்கேற்பு

கிருஷ்ணகிரியில்அகில இந்திய மாங்கனி கண்காட்சி அமைச்சர் பங்கேற்பு;

Update: 2025-06-22 03:36 GMT
கிருஷ்ணகிரி டோல்கேட் அருகேயுள்ள கலைஞர் திடலில் நேற்று மாலை 31-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மதியழகன், பிரகாஷ், ராமச்சந்திரன், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பச்சையப்பன் வரவேற்று பேசினார். அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார்.கண்காட்சியில் விவசாயிகள், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தாய்லாந்து நாட்டை சேர்ந்த விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த மாங்காய்களை காட்சிப்படுத்தி இருந்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Similar News