களியக்காவிளையில் இலவச மருத்துவ முகாம்

சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில்;

Update: 2025-06-22 05:45 GMT
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மற்றும் நாகர்கோவில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம் நேற்று களியக்காவிளை அருகே நடந்தது. இம் முகாமில் அனைவருக்கும் இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டதுடன் கிட்டப் பார்வை, தூரப் பார்வை, வெள்ளெழுத்து பிரச்னை மற்றும் சர்க்கரை நோய், அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கும், கண்புரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ முகாமில் டாக்டர் அகர்வால் மருத்துவ குழுவினர் கண் சிகிட்சை செய்தனர். மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. கண் சிகிட்சை முகாம் ஏற்பாடுகளை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட துணைத் தலைவர் மாகீன் அபுபக்கர், அமைப்பின் நிர்வாகிகள் ராஜகுமார், ஸ்டான்லி பாபு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Similar News