ஓசூர் அருகே குட்கா கடத்திய மூன்று பேர் கைது.
ஓசூர் அருகே குட்கா கடத்திய மூன்று பேர் கைது.;
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் ஹட்கோ போலீசார், பேரண்டப்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 150 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்ததது. விசாரணையில் காரில் வந்தவர்கள் கர்நாடகா மாநிலம், ஜிகினியை சேர்ந்த பாபுலால்(42) வாலஜாபாத் ரத்ரம் தேவாசி(32) இதே ஹீமாராம்(24) ஆகிய மூன்று பேரும் பெங்களூருவில் இருந்து வேலுாருக்கு புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரியவந்தது. அவர்கள் 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து போலீசார் ரூ.60,000 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.