திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள அகஸ்தியர் அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் இந்த அருவிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. எனவே அருவிக்கு சென்று குளிக்க கட்டணம் வசூலிக்கும் வனத்துறை இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.