திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் இரவு நேரங்களில் பல்வேறு தெருக்களின் மாடுகள் அணிவகுத்து நிற்பதால் சிறு சிறு வாகன விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையாகவே உள்ளது. இதற்கு திருநெல்வேலி மாநகராட்சியில் பல்வேறு அதிகாரிகள் ஆணையாளராக இருந்து பலவிதமான நடவடிக்கை மேற்கொண்டும் இன்னும் இதற்கு தீர்வு இல்லாததால் பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்தை தினம்தோறும் குற்றம் சாட்டும் அவல நிலை உள்ளது.