வேலூரில் வி.சி.க-வினர் ஆர்ப்பாட்டம்!
பழங்குடியினர் நல அலுவலர்களை கண்டித்து, வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று (ஜூன் 23) விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
வேலூர் மாவட்டம் செம்பேடு கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் மக்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்காமல் 25 ஆண்டுகளாக அலைக்கழித்து வரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களை கண்டித்து, வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று (ஜூன் 23) விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.