திருக்கோவிலூர் கபிலர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் பாஸ்கரன் பேரணியை துவக்கி வைத்தார். ஆசிரியர் பாலமுருகன் தலைமையில் நாட்டு நலப்பணி திட்டம் மாணவர்கள் முக்கிய வீதிகள் வழியாக போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.