தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பதவி நியமனம் குறித்து அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் திருநெல்வேலி தேமுதிக மாநகர மாவட்ட பொறுப்பாளராக செயல்படும் ஜெயச்சந்திரன் இன்று முதல் திருநெல்வேலி மாநகர மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் ஒத்துழைப்பு கொடுக்க கேட்டுக் கொண்டுள்ளார்.