கருகும் நிலையில் பூஞ்செடிகள்-துரித நடவடிக்கை மேற்கொண்ட மேயர்
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;
நெல்லை சந்திப்பு ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் உள்ள பூஞ்செடிகள் மற்றும் புல்வெளிகளுக்கு தண்ணீர் ஊற்றாமல் தற்பொழுது வெளுத்து வாங்கும் வெயிலின் காரணமாக கருகும் நிலையில் காணப்பட்டது. இதனை அறிந்த மேயர் ராமகிருஷ்ணன் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஒரு நபரை இன்று நியமனம் செய்து தினம்தோறும் தண்ணீர் பாய்ச்சுவதற்கு உத்தரவிட்டார். இவ்வாறு துரித நடவடிக்கை மேற்கொண்ட மேயருக்கு பாராட்டு குவிந்து வருகின்றது.