பழைய டூவீலர்கள் விற்பனையாளர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம்
குமாரபாளையத்தில் பழைய டூவீலர்கள் விற்பனையாளர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடந்தது.;
குமாரபாளையத்தில் பழைய டூவீலர்கள் விற்பனையாளர்களுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடந்தது. சில நாட்கள் முன்பு மதுரையிலிருந்து டூவீலர்கள் திருடி வந்த ஒருவர், குமாரபாளையத்தை சேர்ந்த மூன்று நபர்களிடம் குறைந்த விலைக்கு விற்க, அதனை இந்த மூவரும் அதிக விலைக்கு விற்றது தெரிய வர, நால்வரும் கைது செய்யப்பட்டு , 14 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக பழைய டூவீலர்கள் விற்கும் ஆட்டோ பைனான்ஸ் உரிமையாளர்களுடன் போலீசார் சார்பில், இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர் தவமணி பேசியதாவது: உங்கள் நிறுவனங்களில் உள்ள அனைத்து டூவீலர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் தான் விற்க வேண்டும். அதிகாரிகள் சோதனைக்கு வரும் போது, அனைத்து வாகனங்களின் அசல் ஆவணங்களை காண்பிக்க வேண்டும், திருடப்பட்ட வாகனங்களை எக்காரணத்தை கொண்டும் வாங்க, விற்க கூடாது. மீறினால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.