நெல்லை மாநகர மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள தாய்நகர் இரண்டாவது தெருவில் உள்ள மின் கம்பத்தை சீமை கருவேல மரங்கள் சூழ்ந்து காணப்படுகின்றது. மேலும் அந்த மின்கம்பத்தில் உள்ள தெரு விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் பெரிதும் அச்சத்துடன் சென்று வரும் அவல நிலை உள்ளது.