வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

முதல்வர் வருகையை முன்னிட்டு (ஜூன் 25) மற்றும் ஜூன் (26) நள்ளிரவு 12 மணி வரை ட்ரோன்கள், விளம்பர பலூன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.;

Update: 2025-06-24 16:29 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு நாளை (ஜூன் 25) மற்றும் நாளை மறுநாள் ஜூன் (26) நள்ளிரவு 12 மணி வரை ட்ரோன்கள், விளம்பர பலூன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. அதைமீறி பறக்கவிட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி எச்சரித்துள்ளார்.

Similar News