சீட்டணஞ்சேரியில் காட்டு பன்றிகளால் கரும்பு பயிர்கள் நாசம்
சீட்டணஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிர் செய்த கரும்பு சாகுபடியினை காட்டு பண்றீங்க சேதப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை;
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், சீட்டணஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பாலாற்று பாசனம் மற்றும் ஆழ்த்துளை கிணற்று பாசனம் வாயிலாக பல ஏக்கர் நிலப் பரப்பில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்கின்றனர். நடப்பாண்டு பருவத்திற்கு கடந்த ஜனவரியில் நடவு செய்த கரும்பு பயிர்கள் தற்போது பாதி அளவு வளர்ச்சியை எட்டி உள்ளது. இந்நிலையில், இப்பகுதி கரும்பு தோட்டங்களில் இரவு நேரங்களில் காட்டுப் பன்றிகள் கூட்டமாக புகுந்து கரும்புகளை கடித்தும் அதன் கூர்மையான மூக்கால் உடைத்தும் நாசம் செய்து வருகின்றன. இதனால், அக்கரும்புகள் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.