அறிவியல் ஆய்வு கூட மைய கட்டிடத்திற்கான பூமி பூஜை
மதுரையில் அறிவியல் ஆய்வு கூட மையத்தை அமைப்பதற்கான பூமி பூஜை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.;
மதுரையில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகராட்சி மண்டலம் 3- வார்டு எண்.56 கரிமேடு பகுதியில் பினாக்கல் இன்போடெக் நிறுவனத்தின், அங்கூரான் அறக்கட்டளையின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில், பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆய்வகங்கள், மின்சார-இயந்திர மாதிரிகளை உருவாக்குவதற்கான ஆய்வுக்கூட வசதிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய தரவுகள் அடங்கிய ஓர் ஆய்வு மையத்தை அமைப்பதற்கான கட்டுமான பணிக்கு இன்று (ஜூன்.25) அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் துணை மேயர் நாகராஜன் அவர்கள், அங்கூரான் பவுண்டேஷன் தலைமை செயல் இயக்குனர் பிமல் பட்வாரி, மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.