குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே செங்குருட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (57) கூலி தொழிலாளி. இவர் கடந்த 22ஆம் தேதி இரவு சூழால் சாலையில் நடந்து செல்லும் போது அந்த பகுதியாக வந்த பைக் ராஜேந்திரன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இவர் சூழல் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பி உள்ளார். இந்த நிலையில் ராஜேந்திரனை இரவு உடல்நிலை மோசமானது தொடர்ந்து திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை டாக்டர்கள் ராஜேந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.