ஓட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

நித்திரவிளை;

Update: 2025-06-25 13:35 GMT
குமரி மாவட்டம் நடைக்காவு பகுதியில்  ஹோட்டல் வைத்திருப்பவர் சோனி 40).  இவரது கடையில் அதே பகுதியை சேர்ந்த ராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவ தினம் இரவு ஓட்டல் பூட்டிய பிறகு சோனி தனது பைக்கில் ராஜூவை வீட்டில் கொண்டு கூட சென்றுள்ளார். அப்போது ராஜுவின் வீட்டருகில் உள்ள அண்ணன்,  தம்பி  வராண்டாவில் உட்கார்ந்து இருந்து திருட்டு இளநீர்களை வெட்டி குடித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த ராஜூவும் சோனியும் எச்சரித்துள்ளனர். இதனால்  அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து சோனியை அறிவாளால்  வெட்டிவிட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். காயமடைந்த சோனி  குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். நித்திரவிளை  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News