கலெகடர் உமாவிற்கு பாராட்டு

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், குமாரபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து பலரும் நேரில் வந்து கலெக்டர் உமாவை பாராட்டினார்கள்.,;

Update: 2025-06-25 14:42 GMT
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, முதலமைச்சரின் சிறப்பு திட்டங்கள் செயலாக்கம் துறை கூடுதல் செயலராக சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவரை பல்வேறு தரப்பினர் நேரில் வாழ்த்துக்கள் கூறினார்கள். இவரை எம்.பி.க்கள் ராஜேஷ்குமார், மாதேஸ்வரன், அமைச்சர் மதிவேந்தன், திருநங்கைகள், பொதுநல அமைப்பினர் வாழ்த்துக்கள் கூறினார்கள். குமாரபாளையம் பகுதியிலிருந்து சிறு சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்க தலைவர் பிரபாகரன், பொருளர் மாதேஸ்வரன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா உள்ளிட்ட பலர் நேரில் சென்று, சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் கூறினார்கள். சென்னை தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சிறந்த பொதுநல சேவைக்கான விருது பெற்றமைக்காக, விருது வழங்கி சித்ராவை கலெக்டர் உமா பாராட்டினார். மாவட்ட கலெக்டர் உமா, அனைவரிடமும் கண்ணீருடன் விடைபெற்று சென்றார்.

Similar News