அரசு பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி
மதுரை உசிலம்பட்டி அருகே இன்று அதிகாலை அரசு பேருந்து கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த ஒருவர் உயிரிழந்தார்.;
மதுரையிலிருந்து தேனி சென்ற அரசு பேருந்து நடத்துனர் பெரியகருப்பனுடன் ராஜா என்ற டிரைவர் ஓட்டி வந்தார். இவர் இன்று (ஜூன்.25) அதிகாலை வாலாந்தூர் கண்மாய் அருகே வந்த போது பேருந்து நிலை தடுமாறி கவிழ்ந்து உபத்துக்குள்ளானது. இதில் தூத்துக்குடியை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் மனோகர் ராஜ்(45) என்பவர் உயிரிழந்தார். மேலும் சிலர் காயம் அடைந்தனர் .இது குறித்து வாலந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.