முன்னாள் துணை மேயர் இல்லத்திற்கு சென்ற முதல்வர்!
முன்னாள் துணை மேயர் இல்லத்திற்கு முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.;
வேலூர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 25), திமுக கழக தணிக்கை குழு உறுப்பினர் முகமது சகியின் சகோதரரும், வேலூர் முன்னாள் துணை மேயருமான முகமது சாதிக் அண்மையில் விபத்தில் காலமானதையொட்டி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.இந்நிகழ்வின் போது கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.