விதிமீறலில் ஈடுபட்ட பேருந்துகள் மீது வழக்கு பதிவு

மதுரையில் போக்குவரத்து விதிகளை மீறி இயங்கிய பேருந்துகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது;

Update: 2025-06-25 16:38 GMT
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து துறை (RTO ) இணைந்து காளவாசல் பைபாஸ் பகுதியில் அதிவேகமாக செல்லுதல்,, அபாயகரமாக ஓட்டுதல்,, அதிக சத்தம் கொண்ட ஒலிப்பான்களை ஒலித்தல், அதிக பயணிகளை ஏற்றி செல்லுதல், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்தல் போன்ற போக்குவரத்து விதிமுறை மீறல் செய்த தனியார் பேருந்துகள் மீது இன்று (ஜூன்.25)வாகன வழக்கு பதிவு செய்து சட்டப் பூர்வ நடவடிக்கை மேற்கொண்டனர்.. இதில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் இளமாறன் முன்னிலையில் .. திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி, மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் ( தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம்) ஆகியோர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்

Similar News