பாதாள சாக்கடை சாலையில் திடீர் பள்ளம்

நாகர்கோவில்;

Update: 2025-06-26 02:55 GMT
நாகர்கோவில் மாநகரில் பாதாள சாக்கடைக்காக தெருக்களில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் அடைப்புகளை கண்டறியும் வகையில் மேன் ஹோல்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதுவரை சுமார் 4, 500க்கும் மேற்பட்ட மேன்ஹோல்கள் மாநகரில் உள்ளன. குழாய்கள் பதிக்கப்பட்ட மற்றும் மேன்ஹோல்கள் அமைக்கப்பட்ட சில இடங்களில் அவ்வப்போது சாலையில் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள வாட்டர் டேங்க் ரோட்டில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. பாதாள சாக்கடைக்கான மேன்ஹோல் அருகில் சாலையில் உடைப்பு ஏற்பட்டு இந்த பள்ளம் உருவாகி உள்ளது. இதை பார்த்த அந்தப் பகுதி பொதுமக்கள் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், பிளாஸ்டிக் ட்ரம் கொண்டு வந்து அந்த பள்ளத்தின் மேல் பகுதியில் வைத்தனர்.

Similar News