கன்னியாகுமரி காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட கிறிஸ்டியன் எண்டவர், கன்னியாகுமாரி சப்ரீஜன் ஒய் எம் சி ஏ., கன்னியாகுமரி பதிவுபெற்ற பொறியாளர்கள் சங்கம், இந்தியா அசோசியேசன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ், கன்னியாகுமரி போக்குவரத்து காவல் மற்றும் தீயணைப்புத்துறை ஆகியன இணைந்து நடத்திய போதை விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை கருத்தரங்கு மயிலாடி ரிங்கல்தௌபே மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் கன்னியாகுமரி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் விளக்கினார்.