அமைச்சரை சந்தித்த புதிய ஆட்சி தலைவர்
மதுரையில் புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியர் பிரவின் குமார் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.;
மதுரை மாவட்ட ஆட்சியராக பிரவின் குமார் அவர்கள் நேற்று காலை பதவியேற்று கொண்டார். இந்நிலையில் அவர் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.