திருப்பரங்குன்றம் கும்பாபிஷேக பணிகள் மும்முரம்.

மதுரை திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது;

Update: 2025-06-26 03:44 GMT
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் கோவிலில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வருகிற 23-ந்தேதி காலை 8 மணி முதல் 9 மணியளவில் முகூர்த்தக்கால் நடப்படுகிறது. இதனை தொடர்ந்து வருகிற ஜூலை மாதம் 14-ந்தேதி அதிகாலை 5.25 மணி முதல் 6.10 மணிக்குள் ராஜ கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக ஜூலை 10-ந்தேதி யாகசாலை பூஜை தொடங்குகிறது. தொடர்ந்து 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் இரு வேளையிலும் யாகசாலை பூஜை நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர். அன்றைய தினம் பாதுகாப்பு பணி குறித்து காவல் ஆணையர் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News