வீட்டின் முன் இருந்த ரேஷன் அரிசி மூடைகளை கைப்பற்றிய அதிகாரிகள்
மதுரை திருமங்கலம் பகுதியில் வீட்டின் முன்பிருந்த ரேஷன் அரிசி மூடைகளை அதிகாரிகள் கைப்பற்றினர்;
மதுரை மாவட்டம் திருமங்கலம் கற்பகம் நகர் அருகே தர்மர்நகரில் ஒரு வீட்டின் முன்பு ரேஷன் அரிசி மூடைகள் அடுக்கிவைக்கப்பட்டிருப்பதாக வட்ட வழங்கல் துறையினருக்கு ரகசிய தகவல் நேற்று (ஜூன்.25) கிடைத்தது. உடனடியாக திருமங்கலம் வட்ட வழங்கல் அலுவலர் அய்யம்மாள், தாலுகா சிவில் சப்ளை வருவாய் ஆய்வாளர் நாகேந்திரன் ஆகியோர் அங்கு சென்று சென்ற போது ஒரு வீட்டின் முன்பாக 4 மூடை ரேஷன் அரிசி இருந்தது. 140 கிலோ எடையுள்ள இந்த அரிசி மூடைகள் யாருடையது என தெரியவிலலை. எனினும் அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். ரேஷன் அரிசியை விற்பனைக்கு கடத்தி வந்தவர்கள் அச்சமடைந்து வீட்டின் முன் வைத்துவிட்டு சென்றுள்ளார்களா? என, விசாரணை நடத்தி வருகின்றனர்.