தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த மூன்று பேர் கைது

கோவில்பட்டி ஏரலில்தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த மூன்று பேர் கைது;

Update: 2025-06-26 06:30 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி கிழக்கு மற்றும் ஏரல் காவல் நிலைய எல்லைகுட்பட்ட பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 3 எதிரிகள் கைது - மொத்தம் 39 கிலோ 750 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் இன்று (25.06.2025) கோவில்பட்டி பல்லாக்குரோடு சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருசக்கர வாகனத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக கொண்டு வந்த வடக்கு திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கையா மகன் மாரிமுத்து (66) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 24 கிலோ 750 கிராம் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோன்று ஏரல் காவல் நிலைய போலீசார் இன்று ஏரல் பஜார் பகுதியில் ஒரு டீக்கடையில் வைத்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த ஏரல் முஸ்லிம் வடக்கு தெருவை சேர்ந்த ஜான் (எ) முகமது கான் மகன்களான இஸ்மாயில்கான் (38) மற்றும் கரீம்கான் (35) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 15 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து மேற்படி 2 காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News