தொழிலாளிக்கு சாகும்வரை ஆயுள் சிறை

பாலியல் வழக்கு;

Update: 2025-06-26 06:40 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியை சேர்ந்த 51 வயதுடைய தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகளுக்கு திருமணமாகி 9 வயதில் சிறுமி இருக்கிறார். கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது சொந்த பேத்தியான சிறுமியை தொழிலாளி மிரட்டி தொடர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த கொடூரத்தை தாங்க முடியாத சிறுமி இதுபற்றி தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார். தாய் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தொழிலாளி மீது மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சுந்தரய்யா நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Similar News