கரூர்பேருந்து நிலைய ரவுண்டானாவில் மதுவின் தீமையை விளக்கும் தத்ரூப நாடகம்.

கரூர்பேருந்து நிலைய ரவுண்டானாவில் மதுவின் தீமையை விளக்கும் தத்ரூப நாடகம்.;

Update: 2025-06-26 14:27 GMT
கரூர்பேருந்து நிலைய ரவுண்டானாவில் மதுவின் தீமையை விளக்கும் தத்ரூப நாடகம். மதுவின் தீமை குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் தத்ரூபா நாடகம் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் இன்று மாலை நடைபெற்றது. காவல்துறை மற்றும் என் நண்பன் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற இந்த நாடகத்தில் மது அருந்தியவர்கள் ஒரு காரில் அராஜகம் செய்தவாறு வரும்போது,டூவீலரில் வந்த மாற்றுத்திறனாளி மற்றும் மாணாக்கர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது போலவும் , அதை தட்டிக் கேட்டவரை மது அருந்தியவர்கள் கொடுமையான ஆயுதங்களால் தாக்க முற்படுவதும்,இதனை தடுக்க எமதர்மராஜா வேடமணிந்தவர் அராஜகத்தில் ஈடுபட்டவர்களை தாக்கி அழிப்பது போன்ற தத்துரூபமாக நடத்தப்பட்ட நாடகத்தை டூவீலர் சிக்னலில் நின்றிருந்த வாகன ஓட்டிகள் கண்டு களித்தனர். மேலும், எமதர்மராஜா வேடமனிந்தவர் மதுவின் தீமையை அனைவரும் உணர்வதற்காகவே இந்த நாடகம் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

Similar News