நாமக்கல் மாவட்ட பத்திரிக்கை சங்க நிர்வாகிகள் தேர்வு.

நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு;

Update: 2025-06-26 16:43 GMT
ஏற்காட்டில் உள்ள Hotel Chill Breeze ல், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சேலம் மண்டல மாநாடு நடைபெற்றது மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு மாநில துணை தலைவர் தோழர் அ.சேவியர் வரவேற்புரை ஆற்றினார் மாநில அமைப்பு செயலாளர் தோழர் G.காதர் ஷெரீப், தேசிய குழு உறுப்பினர் M.அசோக்குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர் தோழர் இல.பாஸ்கரன், மண்டல அமைப்பு செயலாளர் தோழர் S.பூபதி ராஜா, சேலம் புறநகர் மாவட்ட தலைவர் தோழர் K.நடராஜன், சேலம் மாநகர் மாவட்ட தலைவர் தோழர் D.அருள் ஆகியோர் முன்னிலை வகிக்க, அ.தி.மு.க வின் முன்னாள் ஏற்காடு பஞ்சாயத்து தலைவர் உயர்திரு R.முரளி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார் ஆசிரியர், திருமதி B.வரலட்சுமி பூபதி குத்துவிளக்கு ஏற்றினார் ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் திருமதி கு.சித்ரா குணசேகரன் ( ADMK ) மறைந்த ஐயா கு.வெங்கட்ராமன் அவர்களின் படத்தை திறந்து வைத்தார் அதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் குரல் சிறப்பிதழை, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், ஏற்காடு ஒன்றிய செயலாளர் தோழர் T.நேரு வெளியிட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சேலம் முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் A.வசந்த் பெற்றுக் கொண்டார் சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உயர்திரு S.பாலகுமார் கலந்து கொண்டார் மறைந்த ஐயா கு.வெங்கட்ராமன் அவர்களின் நினைவுகளை உணர்ச்சி மிக்க வகையில் பேசினார் மாநில ஆலோசகர் தோழர் S.பழனிக்குமார் அதைத் தொடர்ந்து, மூத்த பத்திரிகையாளர்கள் அ.சேவியர், G.காதர் ஷெரீப், R.விடுதலைச்சந்திரன், B.பாண்டியன், K.தனபால் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர் !புதிய மாநில பொதுச் செயலாளராக, அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் கே.ரமேஷ் குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் அதைத் தொடர்ந்து, மாநில துணைப் பொதுச் செயலாளராக விழுப்புரம் ஆர்.கே.முருகன், மண்டல செயலாளராக பண்ருட்டி T.தாமரைக் கண்ணன், மாநில நிர்வாக குழு உறுப்பினராக ஏரல் துரை சாந்தகுமார், மாநில செய்தி தொடர்பாளராக போரூர் P.பார்த்திபன், மாநில கலைப்பிரிவு செயலாளராக திருவண்ணாமலை அ.தெ.முருகையன், தேசிய குழு உறுப்பினராக மூத்த பத்திரிகையாளர் தந்தி தொலைக்காட்சி K.உமாபதி ஆகியோர் அறிவிக்கப்பட்டனர் அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் தேர்வில் கடலூர் கிழக்கு, கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர் நாமக்கல் மாவட்ட தலைவராக ப.பாண்டியன். செயலாளராக ரமேஷ்கிருஷ்ணன். ஆகியோர் தலைவர் டி.எஷ்.ஆர்.சுபாஷால் அறிவிக்கபட்டனர் இறுதியாக தோழர் V.சசி என்ற ஜான் வில்லியம்ஸ் நன்றி தெரிவித்தார் !

Similar News