தளி அருகே பலா, பீன்ஸ், நாசம் செய்த காட்டு யானைகள்
தளி அருகே பலா, பீன்ஸ், நாசம் செய்த காட்டு யானைகள்;
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள தாசரப்பள்ளி கிராமம் பிரபாகர்ரெட்டி என்பவர் தோட்டத்தில் நேற்று முன்தினம் 5 யானைகள் குட்டியுடன் புகுந்து இரண்டு ஏக்கர் பீன்ஸ் தோட்டம், ஒரு ஏக்கர் வள்ளி தோட்டத்தை காலால் மிதித்து நாசம் செய்துள்ளன. அதேபோல் அனுமப்பா என்பவரன் தோட்டத்தில் உள்ள பீன்ஸ், பலா காய்களை பறித்து தின்றும் சென்றுள்ளன. யானைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும், யானைகள் காட்டை விட்டு வெளியே வராதவாறு மின்வேலி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.