கடத்தி வரப்பட்ட லாரியுடன் இருவர் கைது

மதுரை திருமங்கலம் அருகே லாரியில் மணல் கடத்திய இருவரை லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2025-06-27 03:04 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் கரடிக்கல் விஏஓ பூமாரிக்கு மேலஉரப்பனூர் கிராமத்தில் சிலர் மண் அள்ளுவதாக ரகசிய தகவலை தொடர்ந்து விஏஓ, தலையாரி அழகர்சாமி மற்றும் திருமங்கலம் நகர் போலீசார் மேலஉரப்பனூர் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி பகுதியில் நேற்று முன் தினம் (ஜூன்.25) அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனையிட்ட போது முதல் லாரியில் ஒரு யூனிட் கிராவல் மண்ணும், இரண்டாவது லாரியில் இரண்டு யூனிட் கிராவல் மண்ணும் அரசு அனுமதியின்றி அள்ளிவந்தது தெரியவந்தது. திருமங்கலம் கர்ணன்(40), சித்தாலை வல்லத்து(30) ஆகிய இரு டிரைவர்களை போலீசார் கைது செய்து, இரண்டு லாரியையும் பறிமுதல் செய்னர்.

Similar News