உலக போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கலாபன் தலைமை தாங்கினார். இதில் கோட்ட கலால் அலுவலர் சிவசங்கரன், பங்கேற்று போதை பொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து பேரணியை துவக்கி வைத்தார்.