கரூர் - ப்ளூடூத் மூலம் நியாய விலை கடையில் விற்பனை செய்வதை நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
கரூர் - ப்ளூடூத் மூலம் நியாய விலை கடையில் விற்பனை செய்வதை நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.;
கரூர் - ப்ளூடூத் மூலம் நியாய விலை கடையில் விற்பனை செய்வதை நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் இன்று கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாநில கவுரவ பொது செயலாளர் குப்புசாமி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் கதிரவன் , செயலாளர் சுப்பிரமணியன் , பொருளாளர் செல்வரத்தினம் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் , பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது நியாய விலைக் கடைகளில் ப்ளூடூத் மூலம் பொருட்கள் விநியோகம் செய்வதால் அதிக நேரம் ஆகிறது எனவே இந்த நடவடிக்கையை நீக்கிட வேண்டும். நுகர்வோர் வாணிப கிடங்கில் இருந்து வழங்கப்படும் பொருட்கள் சரியான எடையில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். பொருட்கள் விநியோகம் செய்ய கைவிரல் ரேகை மற்றும் கருவிழி பதிவு ஆகிய இரண்டு முறைகளில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.