மேலூர் அருகே இளம்பெண் மாயம்
மதுரை மாவட்டம் தும்பைபட்டியில் இளம்பெண் மாயமென அவரது தந்தை புகார் அளித்துள்ளார்;
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் தாஜுதீன் மகள் அபிரின் (22) என்பவர் நேற்று முன்தினம் (ஜூன்.25) மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் இவரது தந்தை நேற்று (ஜூன்.26) காலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகின்றனர்