ஓசூர்: பணம் பறிக்க முயற்சித்த லாரி மெக்கானிக் கைது.

ஓசூர்: பணம் பறிக்க முயற்சித்த லாரி மெக்கானிக் கைது.;

Update: 2025-06-27 10:57 GMT
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பருதி (43) இவர் பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் மனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த 25-ஆம் தேதி அன்று ஒசூர் ஜூஜூவாடி மேம்பாலம் பகுதியில் டூவீலரில் சென்றார். அப்போது அந்த பகுதியில் நின்றிருந்த வாலிபர் ஒருவர் இளம்ப ருதியை தடுத்து நிறுத்தி கத்திமுனையில் அவரிடம் பணத்தை பறிக்க முயன்ற போது அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை பிடித்து சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் உள்ள அத்திப்பள்ளி பகுதியை சேர்ந்த லாரி மெக்கானிக் ரேகன்கான் (26) என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News