குமரி மாவட்டத்தில் சித்திரங்கோடு பகுதியில் உள்ள கல் குவாரிகளில் நேற்று மாவட்ட எஸ்பி ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் சித்திரங்கோடு, வலியாற்றுமுகம் பகுதியில் செயல்படும் குவாரிகள் மற்றும் கிரஸர்கள் அரசு அனுமதித்த அளவிலான பாரங்களை மட்டுமே அனுமதித்து வருவதாகவும் தங்களிடம் முறையான பாஸ் உள்ளது எனவும் பொய்யான தகவலை வழங்கி விட்டு தொடர்ந்து அரசு நிர்ணயித்த அளவைவிட அளவுக்கு அதிகமான பாரங்களுடன் போலி பாஸ் பயன்படுத்தி பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே குவாரி உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் உட்பட 9 பேர் மீது கொற்றிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து பொதுமக்களின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் எஸ்பி ஸ்டாலினை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.