தொட்டாம்பட்டியில் வயிற்று வலியால் அவதிப்பட்ட இளம்பெண் களைக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை.
தொட்டாம்பட்டியில் வயிற்று வலியால் அவதிப்பட்ட இளம்பெண் களைக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை.;
தொட்டாம்பட்டியில் வயிற்று வலியால் அவதிப்பட்ட இளம்பெண் களைக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை. கரூர் மாவட்டம், தென்னிலை தொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகள் அகல்யா வயது 19. இவர் தாராபுரம் மகாராணி கலை அறிவியல் கல்லூரியில் பிகாம் சிஏ முதலாம் ஆண்டு படித்து இடை நின்று விட்டார். இதனால் அகல்யா தாராபுரத்தில் உள்ள அவரது சித்தி வீட்டில் தங்கி கால்நடைகளை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அகல்யா விரக்தியில் ஜூன் 26 ஆம் தேதி தொட்டாம்பட்டியில் களைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சகுந்தலா அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உயிரிழந்த அகல்யாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர் தென்னிலை காவல் துறையினர்.