கரூர் காமராஜ் மார்க்கெட்டில் சட்டவிரோத புகையிலை விற்பனை. ஒருவர் கைது.

கரூர் காமராஜ் மார்க்கெட்டில் சட்டவிரோத புகையிலை விற்பனை. ஒருவர் கைது.;

Update: 2025-06-27 14:16 GMT
கரூர் காமராஜ் மார்க்கெட்டில் சட்டவிரோத புகையிலை விற்பனை. ஒருவர் கைது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் மார்க்கெட் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை விற்பனை நடப்பது குறித்து காவல் உதவி ஆய்வாளர் நாகராஜுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஜூன் 26ம் தேதி மதியம் 2 மணி அளவில் காமராஜர் மார்க்கெட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அப்பகுதியில் ஆதி விநாயகர் கோவில் அருகே வசித்து வரும் கண்ணன் வயது 49 என்பவர் சட்டவிரோத புகையிலை விற்பனையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த ஹான்ஸ் விமல் பாக்கு கூல் லிப் பான் மசாலா உள்ளிட்ட ரூபாய் 2000 மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கண்ணனை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Similar News